படைச் செருக்கு — அதிகாரம் 78
Valour போர்வீரனின் பெருமை
குறள்கள்
- குறள் 771 — என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்
- குறள் 772 — கான முயலெய்த வம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது
- குறள் 773 — பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு
- குறள் 774 — கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்
- குறள் 775 — விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி ஒட்டன்றோ வன்க ணவர்க்கு
- குறள் 776 — விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து
- குறள் 777 — சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து
- குறள் 778 — உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன் செயினுஞ்சீர் குன்ற லிவர்
- குறள் 779 — இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்
- குறள் 780 — புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து