அதிகாரம் 77
படைமாட்சி
மல்லர் பெரும்படையும் மால்யானை புரவிகளும் செருநரைக்கொல்படையும் செல்வமாம் வேந்தருக்கு வெட்டுக்கு அஞ்சாது வெற்றிக்கே போர்செய்யும் வீரர்களைப் பெற்றவனே வேல் வேந்தன் என்று சொல்லு எலிக்கூட்டம் போலவெகு எதிரிப்படை வந்தாலும் நாகம்போல் எழும்வீரன் நசுக்கிடுவான் என்று சொல்லுவது ஏமனது உதவியுடன் எதிரிபடை வந்தாலும் எதிர்த்துப் பகைவெல்லும் ஏமாப்பு படைக்கழகாம் வழிவழியாய் வந்தமறம் மானமெனும் உயர்பண்பு இவைஎல்லாம் வீரருக்கு ஏமமாம் என உரைப்பாய் . போர்வியூகம் நன்கறிந்த போர்வீரர் தலைமையிலே போர்செய்தல் வேந்தனுக்கு புத்தியாம் என்று சொல்லு பெரிய படை , மனத்துணிவு , பசியில்லா நல்லுணவு இவையெல்லாம் பெற்றபடை இகல் வெல்லும் என்று சொல்லு குறிப்பு : முடிமன்னர் ஆண்டகாலத்தில் யானைப்படை , குதிரைப் படை , தேர்ப்படை , காலால் படை , ( வில் வீரர் , வேல் வீரர் , வாள் வீரர் ) என நால்வகைப் படைப்பிரிவு உண்டு . இவற்றில் எதுமுன்னால் செல்ல வேண்டும் , எது பின்னால் செல்ல வேண்டும் , எது பக்கவாட்டில் செல்ல வேண்டும் , பகைவர்படையை எதிர்கொள்ள வேண்டும் என வகுத்துச் சொல்வதுதான் போர்வியூகம் எனப்படும் .
- வேற்கவிராயர்