அதிகாரம் 72
அவை அறிதல்
மன்றத்தில் கூடியுள்ளோர் மனநிலையைத் தானறிந்து சிந்தனைக்கு விருந்தாகச் செய்திடனும் சொற்பொழிவு சொல்லின் நடைதெரிந்தோர் சொற்பொழிவு செய்திட்டால் எல்லாரும் மெய்பிறந்து இன்பமுடன் கேட்டிடுவார் தமிழறிஞர் கூட்டமெனில் தமிழ்முழக்கம் செய்திடலாம் தெருமேடைப் பேச்சென்றால் சிரிப்புமூட்டி பேசிடனும் அறிஞர்தம் அவைதனிலே ஆராய்ந்து பாராமல் அவசரத்தில் பேசுவதால் அசிங்கப்பட நேரிடலாம் கற்றறிந்தார் பேசுவதைக் கற்றறிந்தார் கேட்டிடுவார் கற்றறிந்தார் பேசுவதும் கற்றறிந்த பேச்சானால் புரிந்துகொள்வார் முன்னிலையில் புவி இயலைப் போதித்தால் வளரும் பயிருக்கு வார்க்கும்நீர் போலாகும் . பழகுதமிழ் அறியார்முன் பட்டிமன்றம் உரையாடல் அங்கனத்தில் ஊற்றிவிட்ட ஆவின்பால் போலாகும் .
- வேற்கவிராயர்