அதிகாரம் 73
அவை அஞ்சல்
பேச்சுக் கலைபயின்றார் பேசும் பொருள் தானறிந்தார் அவையோர்முன் பேசுதற்கு அச்சப்படமாட்டார்கள் . கற்றார் எனப்படுவார் கற்றதெல்லாம் மற்றவர்க்கு தெற்றென விளங்கும்படி தேர்ந்து சொலல் நன்றாகும் போர்க்களம் அஞ்சாமல் போவார் பலபேர்கள் அவைக்களம் அஞ்சாதார் அரிதாகும் என்றுசொல்லு தான்கற்ற நுண்பொருளைத் தக்கார்க்குப் பரிமாறி அவர்பெற்ற கல்வியெல்லாம் இவர்பெறுதல் நன்றாகும் . பேராண்மையில்லாதான் பெற்றகை வாள்போலும் பேரவையில் அஞ்சி நிற்பான் பெற்றதொரு கல்வியுந்தான் பலகல்வி கற்றறிந்தும் பயனில்லை பேரவையில் தேர்ந்து உரையாற்றத் தெரியாதார் என்றுசொல்லு
- வேற்கவிராயர்