அதிகாரம் 71
குறிப்பறிதல்
செய்வான் விரைந்து செயல் தேவையாம் குறிப்பறிந்து வையத்து மாந்தரிலே மாணிக்கம் என்று சொல்லு ஒருவனது உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே தெரிந்து தெளிவானை தெய்வந்தான் என்று சொல்லு குறிப்பால் குறிப்புணரும் கூர்மதி கொண்டவரை இருப்பில் எதுகொடுத்தும் இணைத்திடுதல் நன்றாகும் . குறிப்பில் குறிப்புணரா கூர்ங்கண்கள் பெற்றதனால் வரும்பயன் ஒன்றுமில்லை வாழ்வினிலே என்றுசொல்லு பளிங்கு படம்காட்டும் பண்பதனை முகங்காட்டும் தெளிந்து கொளல்வேண்டும் திருவுடையார் யாரென்று கண்களே காட்டிவிடும் பகைவரையும் நண்பரையும் பார்த்துக் கணித்திடலாம் பார்வையிலே என்றுசொல்லு நுட்பமாய் அளக்குங்கோல் நூதனமாய்ப் பலவுண்டு கண்களைப்போல் அவையெல்லாம் கணக்குப் போடமுடியாது
- வேற்கவிராயர்