அதிகாரம் 68
வினை செயல்வகை
சிந்தித்து நன்றாகத் தேர்வுசெய்த ஒரு செயலை வீண்காலம் போக்காமல் விரைந்து செயல் நன்றாகும் துரிதமாய் முடிக்கும்வினை தூங்காது செயல்வேண்டும் அவசரம் இல்லையெனில் அதைமெதுவாய்ச் செய்திடலாம் செய்காலம் , பொருள் கருவி , செய்வினையும் இடமறிந்து செய்திட்டால் எவ்வினையும் செய்வார்க்கு வெற்றிதரும் யானைதனைக் கொண்டு யானையொன்றைப் பிடிப்பதுபோல் திட்டம் ஒன்றை வைத்தே திட்டம் ஒன்று கண்டிடலாம் . நன்பனுக்கு நன்மைசெய்து நட்பை வளர்ப்பது போல் பகைவனுக்குப் பகையான பலபேரைக் கொளல் வேண்டும் பகைமன்னன் வலிகண்டு பயங்கொள்வார் மக்கள் எனின் பயம்போக்க அவனுக்குப் பணிந்திடுதல் தவறல்ல .
- வேற்கவிராயர்