அதிகாரம் 65
சொல்வன்மை
பேச்சாற்றல் ஒருவனுக்கு பெருஞ்செல்வம் அது கொண்டு எல்லாச் செயல்களையும் எளிதாகச் செய்திடுவான் ஆக்கமும் கேடுகளும் அவர்பேச்சால் வருவதினால் நாக்கை அடக்குவதே நலமாகும் என்றுசொல்லு எல்லாரும் ஏற்கும் வண்ணம் இதமாக உரைசெய்தால் கல்நெஞ்சக்காரனையும் கரைத்திடலாம் என்றுசொல்லு மறுத்து பதிலுரைக்க மற்றவர்க்கு இடமின்றி பொருந்தும் படிக்கெதையும் புகன்றிடுதல் நன்றாகும் சொல்வன்மை உடையவனை , சோர்வேதும் இல்லானை வெல்லுவது முடியாது வேந்தனே என்றாலும் சொன்படி கேட்டிடுவார் சொல்லாட்சி நன்றானால் சுற்றிவளைத்திடுவார் சொல்லாற்றல் இல்லாதார்
- வேற்கவிராயர்