அதிகாரம் 60
ஊக்கம் உடைமை
ஊக்கந்தான் ஒருவருக்கு உடைமைகள் , ஊக்கமில்லார் உடைமைகளை ஒன்றுக்கும் உதவாது என்றுசொல்லு உள்ளத்தின் வலிமையதே உடைமைகளில் பெரிதாகும் பொருடைமை இருப்பதுபோல் , இல்லாமல் சென்றுவிடும் மனவலிமை உடையவர்கள் மனம்வருந்தார் பொருள்போனால் மறுபடியும் போனபொருள் வரக்கூடும் அவர் உழைப்பால் நீர்இருக்கும் உயரம்வரை நீண்டுவந்து பூமலரும் எண்ணத்தின் உயரம்வரை எழுச்சிபெறும் வாழ்க்கைப்பூ உலகையே விலைபேச உள்ளுவதும் தப்பில்லை வந்தால் வரவாகும் வரவில்லை , கவலையில்லை கூர்மையுள்ள கொம்பிரண்டைக் கொண்டுள்ள யானையுந்தான் பாய்ந்துவரும் புலிகண்டு பயந்தோடும் என்றுசொல்லு
- வேற்கவிராயர்