அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை
துன்பம்வந்து நல்லவரை தொந்தரவு செய்யுங்கால் புன்னகை செய்து அதைப் போக்கிவிடல் நன்றாகும் . வெள்ளம்போல் துன்பங்கள் வீட்டுக்குள்பாய்ந்தாலும் அறிவுடையார் அதைக்கண்டு அஞ்சாது எதிர்கொள்வார் . துன்பமதைத் துன்பத்தால் துரத்தி அடிக்கவல்லார் துன்பத்தால் ஒருபோதும் துன்பப்படமாட்டார்கள் . அலைஅலையாத் துன்பங்கள் ஆர்ப்பரித்து வந்தாலும் நிலைகொள்ள விடமாட்டர் நெஞ்சுறுதி கொண்டவர்கள் . இன்பத்தை இன்பமதாய் எண்ணாத இயல்புடையார் துன்பத்தால் ஒருபோதும் துன்பப்படமாட்டார்கள் . இல்லாமை என்பதையும் இன்பமாய் ஏற்பாரை துன்பம் வந்து துன்பஞ்செய்யத் துணியாது என்றுசொல்லு .
- வேற்கவிராயர்