அதிகாரம் 64
அமைச்சு
செயல்திட்டம் செய்கருவி செய்காலம் தேவையெல்லாம் ஆராய்ந்து சொல்பவனே அமைச்சனாம் என்று சொல்லு வலிமையுடன் குடிகாத்தால் , வரலாறு , தான்றிதல் அறச்செயல்கள் தானோம்பல் அமைச்சகத்தின் செயலாகும் . செய்தக்க இதுவென்றும் செய்யும்வழி இதுவென்றும் நயத்தக்க சொல்பவன்தான் நல்லமைச்சன் என்று சொல்லு சாதுபோல் இருந்துகொண்டு சதிசெய்யும் ஒரு அமைச்சன் எழுகோடி பகைவருக்கு இவன்ஒருவன் சமமாவான் மதிநுட்புந்தன்னோடு விதிநுட்பம் கற்றறிந்து செயல்நுட்பம் உள்ளவனே சிறந்தநல் மந்திரியாம் அமைச்சனுக்கு உள்ளபண்பு அத்தனையும் இருந்தாலும் திறமையொன்று இல்லையெனில் சிறப்பாகா செய்வினைதான்
- வேற்கவிராயர்