அதிகாரம் 66
வினைத்தூய்மை
அமைச்சர் துணையிருந்தால் ஆக்கமது கைகூடும் நற்செயலால் அதையும்விட நன்மைபல உண்டாகும் ஒதுக்கிவிடல் நன்றாகும் ஒருபயனும் விளையாத கருமங்கள் என்றுணரும் காவலன்தான் என்று சொல்லு நாட்டினது செல்வமெல்லாம் நாசமாய்ப் போகுமென்றால் வேட்டுவைத்து அவ்வினையை விரட்டுவது நன்றாகும் நடுக்கம் உறமாட்டார்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இடுக்கண்வரும் காலத்தும் இழிவந்த செய்யாரே ஈன்றதாய் பசிபோக்க இல்லை பணம் என்றாலும் ஈனம்வரும் செயலெதிலும் ஈடுபடல் ஆகாது சஞ்சலத்தால் வந்தபொருள் தங்காது மன்னனுக்கு வெஞ்சமரில் வீரமெல்லாம் விடைபெற்றுச் சொல்வதுபோல் குறிப்பு : இடுக்கண் - துன்பம் , சஞ்சலத்தால் - மக்களைச் சஞ்சலத்திற்குள்ளாக்கி . விடைபெற்று - உயிரை விட்டுவிட்டுச் செல்லுதல் . அதாவது செத்து மடிதல் . ஈனம் - கேவலம் - இழிவு .
- வேற்கவிராயர்