அதிகாரம் 69
தூது
அன்புடைமை , குடிப்பிறப்பு , அரசனுக்கு விசுவாசம் பண்புடைமை இம்மூன்றும் பண்பாகும் தூதுவர்க்கு அன்பறிவு , சொல்வன்மை அம்மூன்று பண்புகளும் அரசனது தூதுவர்க்கு அமைந்திருத்தல் நன்றாகும் கோவேந்தன் ஒருவனுக்கு கொண்டுசென்ற செய்தி எல்லாம் விரித்துரைக்க வல்லவனே வேந்தன் தூதுவனாம் . அறிவாற்றல் உள்ளவனும் ஆள்எடுப்பாய் உள்ளவனும் சொல்ஆற்றல் உள்ளவனும் தூது சொல்லத்தக்கவனாம் தூய்மை மனங்கொண்டு துணிவுடைமை கைக்கொண்டு வாய்மை தவறாமல் வழக்குரைப்பான் தூதுவனாம் .
- வேற்கவிராயர்