அதிகாரம் 55
செங்கோன்மை
இவர்நமக்கு வேண்டுபவர் இவர்வேண்டார் என்றொருவர் அகம் ஏதும் இல்லாத ஆளுமையே செங்கோன்மை வான்வழங்கும் மழைநீரால் வாழுமிந்த வையமெல்லாம் கோன்வழங்கும் ஆட்சியின் கீழ் குடிமக்கள் வாழ்ந்திடுவார் அறங்கூறும் வேதங்களும் அந்தணரின் சாத்திரமும் நீதியில்லா மன்னவனால் நிலைகுலைந்து போகுமன்றோ குடிபடைகள் நலன்கருதிக் கோலோச்சும் மன்னவனின் அடிதொழுது வாழ்ந்திடுவார் அவன்மக்கள் என்றுசொல்லு வேற்படைதான் வேந்தனுக்கு வெற்றிதரும் என்பதல்ல கோலோச்சும் நெறிமுறையும் கொண்டுவரும் வெற்றியினை கொலைசெய்யும் கொடியவரைக் கோவேந்தர் தண்டித்தல் களையென்னும் புல் , செடியைக் களைந்துவிடல் போலாகும் .
- வேற்கவிராயர்