அதிகாரம் 54
பொச்சாவாமை
கோபம்எனும் கொடும்பாவி கொண்டுவரும் தீதைவிட சோம்பலெனும் பேய்செய்யும் பெருந்துன்பம் என்றுசொல்லு பொச்சாப்பு எனும் சோர்வு புகழெல்லாம் அழித்துவிடும் அன்றாடம் வறுமைவந்து அறிவுதனை அழிப்பதுபோல் அச்சம் உள்ள அரசனுக்கு அரண் இருந்தும் பயனில்லை பொச்சாப்புக்கொண்டவர்க்கு புகழ்இல்லை நன்மையில்லை . துன்பமது வருமுன்னர் துறத்தும்வழி பேணாது சோர்ந்து இருப்பாரேல் தொந்தரவு சுற்றிவரும் . துன்பமது வருமுன்னர் துறத்தும்வழி பேணாது சோர்ந்து இருப்பாரேல் தொந்தரவு சுற்றிவிடும் சோர்வுதனை நீக்கிவிட்டு தொடர்ந்து முயன்டுவார் அரியசெயல் செய்திடுவார் அவர்க்கில்லை தோல்வியது இதிஎன்ன பெரியசெயல் என்றெண்ணி இறுமாந்து சோர்ந்து இருந்துவிடில் தொடர்ந்து வரும் துன்பமெல்லாம் நினைத்த ஒரு செயலெதையும் நிறைவேற்றிவிடமுடியும் மனச்சோர்வு இல்லாத மானிடர்தான் என்றுசொல்லு
- வேற்கவிராயர்