அதிகாரம் 50
இடனறிதல்
போர்செய்யத் தக்கதொரு போர்க்களத்தை தேர்வு செய்து போர்செய்யும் மன்னனவன் பெற்றிடுவான் வெற்றியினை படைவீரர் வலியோடு பலமுள்ள அரணிருந்தால் பகைவர்படை வென்றிடலாம் பாரான்வோர் என்று சொல்லு நாடு பிடிக்க எண்ணும் நப்பாசை மன்னவனை சாம்வான் இடமறிந்து தப்பாடில் வென்றிடலாம் தண்ணீரில் முதலைக்கு தாளாத பலமுண்டு வெளியேறில் பிறவிலங்கு வென்றுவிடும் முதலையினை கடல்நீரில் ஓடாது கடைந்தெடுத்த நெடுந்தேரும் கடல் ஓடும் நாவாயும் கடுநிலத்தில் ஓடாது வேற்படைக்கு அஞ்சாத வேழத்தை வெறும் புனலின் சேற்றுக்குள் ஆழ்ந்துவிடின் சிறுநரியும் வென்றுவிடும்
- வேற்கவிராயர்