அதிகாரம் 48
வலியறிதல்
போர்செய்யப் போகுங்கால் பிறர்பலமும் தன்பலமும் படைபலமும் ஆராய்ந்து பார்த்திடுதல் நன்றாகும் இதன்மூலம் இவ்வழியால் எதிரிபடை வென்றிடலாம் என்றாய்ந்து செயல்பட்டால் இயலாத தொனறுமில்லை தன்னைவிடப் பலசாலி தாரணியில் இல்லைஎன்று ஆணவம் கொண்டுநின்றால் அழிந்திடுவான் என்று சொல்லு மயில்தோகையானாலும் மட்டின்றி ஏற்றிவிட்டால் இரும்பாக இருந்தாலும் இற்றுவிடும் வண்டியச்சு அதுபோல அரசனுக்கு அதிகம்பேர் பகையானால் அரிமாவைப்போன்றவனும் அழிந்திடுவான் என்று சொல்லு தளிர் கொம்பில் ஏறியதைத் தாண்டியும் கால்வைத்தால் மண்மீது தான்விழுந்நு மரித்திடுவார் என்று சொல்லு வருமானம் தனையறிந்து வாழ்வதற்கு அறியாதான் திருவெல்லாம் போகவிட்டு செயலிழந்து திகைத்திடுவான்
- வேற்கவிராயர்