அதிகாரம் 43
அறிவுடைமை
அழிவில்லா வாழ்வுக்கு அறிவுடைமை அரணாகும் கோவேந்தர் கட்டியுள்ள கோட்டைச் சுவர் போல தவறான பாதையிலே தன்மனதைச் செலுத்தாமல் நல்வழியில் நடப்பதுதான் நல்லறிவாம் என்று சொல்லு அறிவுடையோர் சொன்னாலும் அறியாதார் சொன்னாலும் அப்பொருளின் உண்மையினை அறிந்து கொளல் நன்றாகும் உயர்ந்தோர் சொலும்வழியில் ஒழுகுவது நன்றாகும் இன்பதுன்பம் இரண்டையுமே ஏற்பதுதான் அறிவுடைமை எந்தவொரு ஒழுக்கத்தில் இவ்வுலகம் வாழ்கிறதோ அவ்வழியே போவதுதான் அறிவுடைமை என்று சொல்லு இல்லாத செல்வமில்லை இவ்வுலகில் அறிவிருந்தால் இருந்தாலும் செல்வங்கள் இலவாகும் அறிவிலிக்கு வருமுன்னர் காக்கின்ற வழியறிந்தார் ஒருவருக்கு வருந்துகின்ற நோய்எதுவும் வாராது என்று சொல்லு
- வேற்கவிராயர்