அதிகாரம் 39
இறைமாட்சி
படைகுடியும் , நல்லமைச்சும் , பாதுகாப் , பரண் , நண்பர் அளவிலாப் பொருளுடையான் அரசர்க்கும் அரசாவான் அஞ்சாமை ஈகையுடன் அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாது ஆள்வோர்க்கு இருந்திடவும் வேண்டுமன்றோ தூங்காமை கல்வியுடன் துணிவுடைமை இம்மூன்றும் நீக்கமறப் பெற்றவரே நிலம் ஆள்வார் என்று சொல்லு நாட்டின் நலன்கருதி நல்லாட்சி செய்பவரைப் போற்றுவார் மக்களெல்லாம் புண்ணியரே வாழ்க வென்று புதியபல சட்டங்கள் போடுவதால் பொருள்சேர்த்து திட்டமிட்டு நற்பணிகள் செய்திடலாம் நல்லாட்சி கோரிக்கை கொண்டுவரும் குடிமக்கள் காண்பதற்கு கருணை முகம்காட்டி கனிவாகப் பேசிடனும் குறையொன்றும் இல்லாமல் கோலோச்சும் மன்னவன் தான் இறைவனாம் மக்களுக்கு இச்செய்தி போய்ச்சொல்லு
- வேற்கவிராயர்