அதிகாரம் 34
நிலையாமை
நாடகம் முடிந்தவுடன் நகர்ந்துவிடும் மக்களைப் போல் தேடிய செவ்வமதும் சென்றுவிடும் என்று சொல்லு நிலையில்லா செல்வமதை நிலைஎன்றும் ஊன்உடலம் அழியாது என்பதுவும் அறிவுடைமை ஆகாது . பொருளிருக்கும் நேரத்திலே புகழ்சேர்க்கும் நற்செயல்கள் விரைந்து முடித்துவிடல் வேண்டுமென்று சொல்வாயே இன்றுநாம் பார்க்கின்ற இம்மனிதர் நாளைக்கு இருப்பாரா இவ்வுலகில் என்று சொல்ல முடியாது எப்போது சாவுவரும் என்பதொன்றும் தெரியாது தப்புத்தப்பா வரும் எண்ணம் சதகோடி என்று சொல்லு சொல்லாமல் வரும்சாவு தூங்குவது போலாகும் தொல்லையாம் இப்பிறப்பு தூங்கிப்பின் எழுவதன்றோ
- வேற்கவிராயர்