அதிகாரம் 29
கள்ளாமை
கள்ளத்தால் பிறன்பொருளைக் களவாடிச் சேர்ப்பவரை எள்ளிநகை யாடுவரே இவரைப்பிறர் என்று சொல்லு வெள்ளம் போல் துன்பங்கள் விளைந்தாலும் பிறர் கொள்ளத்தான் நினைப்பதும் கொடியதாம் என்று சொல்லு களவாடிப் பெரும்பொருளைக் கட்டித்தான் வைத்தாலும் சொத்துவந்த வழிபார்த்துச் சொல்லாமல் போய்விடுமே எப்பொழுது சோர்ந்திருப்பார் இவர்பொருளை எடுத்திடலாம் என்றெண்ணும் இவர்மனதில் இருக்காது அருள் அன்பு நேர்மையாம் வழிநடப்பார் நெஞ்சமதில் அருள் இருக்கும் களவுசெய்வார் நெஞ்சமதில் கயமையே மிஞ்சிநிற்கும் களவுசெய்வார் உடலமது கடுநரகில் தள்ளப்படும் கள்ளமில்லார் உடலந்தான் கண்டுகொள்ளும் மோட்சத்தை
- வேற்கவிராயர்