அதிகாரம் 24
புகழ்
தருமம்பல செய்வதினால் தாரணியில் புகழ்கிடைக்கும் வருமானம் அதுவேயாம் வாழ்கின்ற உயிர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் ஈய்ந்திங்கு ஏழைகளை புரப்பதால் பெறுவதுதான் புகழ்என்று போய்ச் சொல்லு உயர்வான செல்வமெலாம் உலகத்தில் நிலையில்லை புகழ்ஒன்று மட்டுந்தான் பொன்றாது என்று சொல்லு பூவுலகில் என்றென்றும் புகழ்பெற்று வாழ்வாரை வானுலகில் உள்ளவரும் வாழ்த்துவார் என்று சொல்லு பிறந்தால் உலகினிலே பீடுநடை தான் வேண்டும் இல்லையெனில் பிறந்ததினால் இல்லைபுகழ என்று சொல்லு புகழ்ஒன்றும் இல்லாமல் பூமிதனில் வாழ்பவர்கள் இகழ்வாரை நோவதினால் என்னபயன் நீகேளு வாழ்வார் எனப்படுவார் வசையொழிய வாழ்வாரே வசைச் சொல்லுக் காளானால் வாழ்விலார் என்று சொல்லு
- வேற்கவிராயர்