அதிகாரம் 28
கூடா ஒழுக்கம்
மாண்புள்ள ஒழுக்கமதை மறைத்துவிட நினைப்பானேல் அவனுடைய நடத்தையினை ஐம்புலனும் கேலி செய்யும் நல்லொழுக்கம் இல்லாமல் நற்செயலும் இல்லாமல் தோற்றத்தால் பகட்டிவிடில் செய்த குற்றம் மறையாது தன்மனதில் திடமின்றித் தவவேடம் கொண்டவர்கள் பசுத்தோல் புலிபோலப் பாவச்செயல் தான்செய்வார் சாதுபோல் உடையணிந்து தகாத செயல் செய்பவர்கள் வலைவிரித்துப் புள்பிடிக்கும் வனவேடன் ஒப்பாரே நஞ்சுதனை உள்வைத்து நல்லவர்போல் நடிப்பவர்கள் வஞ்சகர் தன்னைவிட வன்செயலர் என்று சொல்லு நல்லவர்போல் தென்படுவார் நல்ல செயல் செய்யாரே பொல்லாதவர் போல்வார் நல்லதே செய்திடுவார் தலைமொட்டை வேண்டாமே தாடியதும் வேண்டாமே நல்லோர் பழிக்காமல் நடப்பதுதான் தவமாகும்
- வேற்கவிராயர்