அதிகாரம் 31
வெகுளாமை
சினம் என்னும் கோபமதை செல்லுமிடம் காட்டாது குணம் என்னும் நற்பண்பை கொள்வதுதான் நலமாகும் செல்லிடத்துக் காப்பவனே சினம்காப்பான் மற்றுமந்த செல்லாத இடந்தனிலே செலுத்துவதும் தீதாகும் பொங்கிவரும் பாலையொரு பொட்டுநீர் அடக்குதல் போல் ஓங்கியெழும் கோபமதை ஒடுக்கிவிடல் நன்றாமே . கோபமது ஆட்கொண்டால் கொடியபெரும் நோயாகும் குணம் ஒன்றும் ஆகாது கொன்று விடும் என்று சொல்லு சினமென்னும் காமாலை சேர்ந்தவரைக் கொன்றுவிடும் இனமென்னும் சொந்தபந்தம் எல்லாமே கெட்டுவிடும் சினம் கொண்ட மனித உடல் செத்தபிணம் போலாகும் சினத்தைத் துறந்துவிட்டால் சேமமுடன் வாழ்வார்கள் கல்லின்மேல் அறைந்திட்டால் கைக்குத்தான் நோவு வரும் சினம்பட்ட நெஞ்சமதும் தேம்பியழும் என்று சொல்லு
- வேற்கவிராயர்