திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அதிகாரம் 32

இன்னா செய்யாமை

பெருஞ்செல்வம் கிட்டுமென்று பிறர் சொல்லக்கேட்டுமனம்
மாசற்றார் செய்யாரே மாந்தருக்குத் துன்பந்தான்

கோபம்கொண்டு ஒருமனிதர் கொடியதுன்பம் செய்தாலும்
தானும் அதைச்செய்யார் சான்றோர்கள் என்று சொல்லு

தீமைசெய்த ஒருவருக்கு தீமைசெய்ய நினைக்காமல்
நன்மைசெய்தால் அதுவேதான் நல்லதொரு தண்டனையாம்

ஒரு நாளும் மற்றவர்க்கு ஊறுசெய்ய எண்ணாதார்
தலையாய மாண்புதனை சாற்றிடுவாய் ஊரெல்லாம்

முற்பகலில் ஒருவருக்கு மூட்டிவிட்ட துன்பமது
பிற்பகலில் திரும்பிவந்து பின்புறமாய் நிற்குமன்றோ

சஞ்சலங்கள் கூடாது தன்வாழ்வில் என்று சொன்னால்
அடுத்தவர் வாழ்வினிலே அதைச் செய்யக்கூடாது

- வேற்கவிராயர்

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural