அதிகாரம் 23
ஈகை
இல்லார்க்கு ஈவதுதான் ஈகையாம் மற்றுமிங்கு இருப்பவர்க்கு ஈய்ந்திட்டால் எதிர்பார்ப்பு அதிலுண்டு நன்மைபெறத் தன்வாழ்வில் நாணமதை விட்டுவிட்டு தன்கையை முன்நீட்டி ‘ தா ‘ என்றால் இழிவாமே இன்பமாம் மோட்சமது இல்லையென்று சொன்னாலும் ஈதலே என்றென்றும் இன்பமாம் என்று சொல்லு ஈகையெனும் நல்லகுணம் எல்லார்க்கும் வாராது உயர்குடிப் பண்பாளர் ஒருவருக்கே அதுசாலும் பசியால் வாடுபவர் பசிபோக்கச் செலவிடுதல் அதுவேதான் காப்பாகும் அப்பொருட்கு அழிவில்லை பிறருக்கு ஈயாமல் பெற்றபொருள் அத்தனையும் தானேதான் அனுபவித்தல் தகாத செயல் என்று சொல்லு மரணம் ஒரு கொடும்பாவி மனிதருக்கு அஃதைவிட கொடுக்க இயலாமை கொடும்பாவி அவருக்கே
- வேற்கவிராயர்