அதிகாரம் 20
பயனில சொல்லாமை
பலபேர் பகைகொள்ள பயனில்சொல் பேசுபவன் பலபேரின் நகைப்புக்கே பயன்படுவான் என்று சொல்லு ஒன்றுக்கும் உதவாதான் ஒருபோதும் இவன் என்று நன்றாக அறிந்திடலாம் நன்மையில்லா அவன் பேச்சால் பயனில்லா வீண் பேச்சைப் பாராட்டிப் பேசுபவன் பயனுள்ள மக்களிலே பதறாவான் என்று சொல்லு நலம்பயக்கா வார்த்தைகளை நன்மக்கள் பேசிடினும் பயனில்லா வாத்தையது பல்படவே கூடாது . அரும்பயன் ஆய்ந்தறிந்த அறிவுடையோர் சொல்லாரே பெரும்பயன் ஏதுமில்லாப் பிழைபட்ட வார்த்தைகளை பெரியோரே பேசுங்கள் பயனிக்கும் சொற்களையே பேசாது விட்டிடுங்கள் பயனில்லாச் சொற்களைத்தான்
- வேற்கவிராயர்