அதிகாரம் 16
பொறை உடைமை
அகழ்வாரைத் தாங்குகின்ற அண்டத்தைப் போல்நாமும் இகழ்வாரைப் பொறுப்பதுதான் எல்லார்கும் நலமாகும் தெரிந்தோ தெரியாதோ தீமைசெய்த சீறியாரை மன்னித்தல் மட்டுமின்றி மறப்பதுவும் நன்றாகும் வறுமையிலும் மிகப்பெரிய வறுமையது என்னவென்றால் விருந்து புறந்தள்ளல் வேறில்லை அதுவேயாம் குடும்பம் நடத்தவல்ல குணமுள்ள மங்கையற்கு வன்மை எதுவென்றால் மனத்திண்மை ஒன்றேயாம் பொறுமை மனங்கொண்டு புகழ்புரிவார் இல்லமதில் நிறையப் பொருள் சேரும் நீங்காது என்று சொல்லு ஒறுத்தார் ஒருநாளும் உயர்வடைய மாட்டார்கள் பொறுத்தாரை எல்லாரும் போற்றிப் புகழ்ந்திடுவார் ஒறுத்தார்க்குக் கிட்டுவது ஒருநாளை இன்பந்தான் பொறுத்தார்க்குச் சாகும்வரை புகழ்சேரும் என்று சொல்லு ஆள்பலம் கொண்டவர்கள் அக்கிரமம் செய்தாலும் தன்புத்திக் கூர்மையினால் தடுத்திடுவார் பொறையுடையார்
- வேற்கவிராயர்