அதிகாரம் 11
நடுவு நிலைமை
வேண்டுவார் வேண்டாதார் வேற்றுமை பாராமல் நாவை அசைப்பதுதான் நடுவுநிலை என்று சொல்லு சமன்செய்து சீர்தூக்கும் தராசினது செயல்போல திறம்பாது நேர்மையுடன் தீர்ப்பளித்தல் நன்றாகும் செம்மைநெறி வழிநடந்து சேர்த்துவைத்த செல்வமெலாம் சிதையாது பலனளிக்கும் தலைமுறைக்கும் என்று சொல்லு நல்லவரா கெட்டவரா நடுவுநிலை உள்ளவரா என்பதை அவர்மக்கள் எடுத்துரைப்பார் என்று சொல்லு அறத்தாற்றின் வாழ்நாளில் வாடுகின்ற வேளையிலும் சிறுமைதரும் எச்செயலும் செய்வதற்கு நினையாரே வாணிகம் செய்திடுவார் வாங்குதல் விற்பதிலும் பேணுதல் வேண்டுமன்றோ பிறர்நலமும் தன்னலம்போல்
- வேற்கவிராயர்