அதிகாரம் 7
மக்கட்பேறு
பண்புடைய பிள்ளைகளே பெற்றோரின் பெருஞ்செல்வம் அண்டாது பழிபாம் அவர் வாழ்வில் என்று சொல்லு தன்மக்கள் மெய்தீண்டல் தன்னுடலுக் கின்பமதாம் இன்னுமவர் சொற்கேட்டல் இன்பமாம் செவிகளுக்கே உண்ணும் உணவினிலே ஊழல்கை ஓட்டுவித்து தின்னு என்று சொன்னாலும் தெள்ளமுதாம் பெற்றோர்க்கு தந்தை மகன்தனக்கு தக்ககல்வி தானளித்து இந்த உலகரங்கில் ஏற்றமுறச் செய்வானே என்னதவம் செய்தானோ இவன்தந்தை என்று சொல்ல மகன்தானும் வேண்டுமென மற்றவர்க்கு தூது சொல்லு சான்றோன் எனப்பிறர்கள் தன்மகனைப் பாராட்ட பெற்றதாய் முன்பைவிடப் பேரின்பம் கொள்வாளே மக்கள்தாம் பேசுகின்ற மழலைச்சொல் கேளாதார் மகரயாழ் இனிதென்பார் மதியிலார் என்று சொல்லு
- வேற்கவிராயர்