அதிகாரம் 5
இல்வாழ்க்கை
துறவறந்தான் பூண்டார்க்கும் துய்க்கவழி இல்லார்க்கும் இரந்தார்க்கும் துணையாவான் இல்வாழ்வான் என்று சொல்லு தெய்வம் , விருந்துறவு , தெய்வத்திரு , தான் என்று அய்வரையும் பேணுவது அவர் கடமை என்று சொல்லு அன்பின்வழிநின்று அறவழியில் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்வதுதான் இல்வாழ்க்கை என்று சொல்லு . இல்வாழ்வின் விதிமுறைகள் என்னவென்று தானறிந்து நல்லாற்றின் அதுவேயாம் நல்வாழ்வு என்று சொல்லு . அறம்என்று சொல்லுவதே அன்புடைய இல்வாழ்க்கை பிறர்பழிக்கு ஆளானால் பெருமையது குன்றிவிடும் . வையகத்தில் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்பாவர்கள் தெய்வமாய் வானவருள் சேர்ந்திருப்பார் என்று சொல்லு .
- வேற்கவிராயர்