அதிகாரம் 4
அறத்தின் சிறப்பு
நீதி நெறி தப்பாது நேர்வழியில் நடப்பவர்க்கு மேதினியில் அதுஒன்றே விழுச்செல்வம் என்று சொல்லு . அறத்தை மறந்துவிடில் ஆக்கமும் அகன்றுவிடும் மறக்காமல் அறஞ்செய்வார் மாண்புறுவார் என்று சொல்லு நல்லதையே எண்ணுகின்ற நன்மனதைப் பெற்றுவிட்டால் எல்லா அறமுமதற் கீடில்லை என்று சொல்லு இன்னாச்சொல் பேராசை இழுக்கான போறாமை இல்லைஎனில் நல்லறமென் றியம்பிடுவாய் எல்லார்க்கும் இயலும் விதத்திலெல்லாம் இடைவெளியே இல்லாமல் முயன்று அறஞ்செய்தால் முத்திகிட்டும் என்று சொல்லு அறச்செயலால் வருவதுதான் அளப்பரிய இன்பமதாம் மறச்செயலால் பழிசேரும் மானிடர்க்கு என்று சொல்லு .
- வேற்கவிராயர்