அதிகாரம் 3
நீத்தார் பெருமை
துன்பந்தரும் ஆசையினைத் தொலைத்துவிட்ட பெரியோரை இன்னல் ஒன்றும் செய்யாது என்ற செய்தி சொல்வாய் நீ . துறந்தார் பெருமையினைச் சொல்ல நினைப்பதுவும் இறந்தாரை எண்ணுவதும் இயலாது என்று சொல்லு . இம்மை மறுமையெனும் ஈருலக வாழ்விலுமே செம்மை நெறியாலே சிறப்படைவார் என்று சொல்லு கண்காது மூக்குசெவி கால்முளைத்த உடம்பையுந்தான் சொன்னபடி கேட்க வைப்பார் துறவியர்தாம் என்று சொல்லு . அந்தணர்கள் என்றென்றும் அறஞ்செய்வார் எவ்வுயிர்க்கும் தொந்தரவு செய்யாரே துறவியர்தாம் என்று சொல்லு . சாந்தமெனும் குணமுடைய சான்றோர்கள் ஒருபோதும் சீந்தாரே கோபமதைத் திருக்குறளே தூது சொல்லு
- வேற்கவிராயர்