அதிகாரம் 25
அருளுடைமை
செல்வத்துள் மிகப்பெரிய செல்வமது அருட்செல்வம் பொருட்செல்வம் எல்லார்க்கும் பொதுவாகும் என்றுசொல்லு பக்திஇ வழிநின்று பரமனருள் பெற்றுவிட்டால் துறவறத்தார் வாழ்வுக்குத் துணையாகும் என்று சொல்லு இறைவனருள் துறவியர்க்கு இருக்கின்ற காரணத்தால் இருளான துன்பங்கள் இருக்காது இவர்வாழ்வில் அனைத்து உயிர்களையும் அவர் உயிர்போல் நேசிக்கும் அன்பான துறவியரை அணுகாது தீத்துன்பம் இவ்வுலக வாழ்வுக்கு இல்லைபொருள் என்று சொன்னால் இருக்காது இன்பமொன்றும் இல்வாழ்வில் என்று சொல்லு இறைவனருள் இல்லார்க்கு இல்லையிடம் மோட்சமதில் இல்வாழ்வில் பொருளின்றி இன்பமில்லை என்பது போல செலவான பெரும்பொருளைத் தேடலாம் மறுபடியும் தேவனருள் தேய்ந்துவிடில் தேடுதற்கு அரிதாகும் எளியவர்தாம் இவரென்று ஏகுவீர் சண்டைக்கு வலியார்முன் உங்களது வல்லமையைக் காண்பீரே
- வேற்கவிராயர்