அதிகாரம் 40
கல்வி
நல்ல நல்ல நூல்களெல்லாம் நன்றாகக் கற்று அதில் சொன்னபடி நடப்பதுதான் சுகவாழ்வு என்று சொல்லு எண்கணிதம் கற்பதுவும் எழுதுவதைக் கற்பதுவும் கண்பெற்றார் பெற்றபயன் கண்டு சொல்லு வாழுவார்க்கு கண்ணுடையார் என்பவர்கள் கற்றவரே முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதார் போய் உரைப்பாய் எல்லார்க்கும் புத்திதரும் கல்வியொன்றே பொன்னகையாம் கற்றோர்க்கு வேறுஎந்த அணிகலனும் வேண்டாமே என்று சொல்லு தோண்டும் அளவுவரை சுரக்கும் நீர் மணற் கேணி கற்கும் அளவினிலே கலைஞானம் மேலோங்கும் யாதானும் ஊராமால் நல்லவர்கள் நட்பாமால் சாகும்வரை கல்லாதான் சகவாழ்வு என்னாவாம் ? பிழையேதும் இல்லாத பெருஞ்செல்வம் கல்வியதாம் சேர்த்துள்ள மற்றபொருள் செல்வமில்லை என்று சொல்லு
- வேற்கவிராயர்