அதிகாரம் 47
தெரிந்து செயல்வகை
செய்யப் புகும்செயலால் செலவைவிட வரவுமிகின் செய்வதுதான் நல்லதென்று தேசமெங்கும் போய்ச்சொல்லு தொழில்தெரிந்த வல்லுநரின் தொடர்பு கொண்டு செய்வார்க்கு அரியசெயல் ஒன்றுமில்லை அவருக்கு வெற்றியுண்டு ஆக்கம் தனைக்கருதி அறிவுடையோர் செய்யாரே போட்ட முதல் இழக்கும் புன்மையாம் செயலெதையும் தேவையாம் செயலெதையும் செய்யாமை தீமையதாம் தேவையற்ற செயலெதையும் செய்வதுந்தான் தீமையதாம் எண்ணித் துணிந்திடனும் எச்செயலும் செய்வதற்கு துணிந்தபின் எண்ணுவது தோல்வியாம் என்று சொல்லு நல்லதை செய்திடினும் நன்றாகக் கொள்ளாரே பெறுவார் தகுதிக்குப் பிழையானால் என்று சொல்லு நகைப்புக்கு இடமான , நன்மக்கள் விரும்பாத செயல்களை அரசாள்வார் செய்யாமை நன்றாகும்
- வேற்கவிராயர்