அதிகாரம் 74
நாடு
பெருமளவில் வேளாண்மை பெருமையுள்ள குடிமக்கள் பெருஞ்செல்வம் பேரறிஞர் பெற்றது நல்நாடாகும் உறுபசியும் செருபகையும் ஒழியாத பெரும்பிணியும் சேராது இருப்பதுதான் சிறந்ததொரு நாடாகும் பல்குழுவும் பாழ்படுத்தும் பலகட்சிக் குண்டர்களும் உள்ளுக்குள் இருந்துகொண்டு ஊறு செய்தால் நாடுகெடும் நீர்பெருகும் ஏரிகளும் நெடியபல மலைத்தொடரும் நீர்அகழி பேரரணும் நிலையான அங்கங்களாம் . விளைவின்பம் , பிணியின்மை , வேண்டுபொருள் , பெருமை புகழ் அழகாகும் நாட்டிற்கு அவ்வைந்தும் என்று சொல்லு நீர்வளமும் நிலவளமும் நேர்த்தியாய்க் காடுகளும் மலைவளமும் இயற்கையில் மாண்டதுவும் நாடாகும் .
- வேற்கவிராயர்