அதிகாரம் 76
பொருள் செயல்வகை
பெருமையாம் பண்பேதும் பெற்றிருத்தல் தேவையில்லை பொருள்மட்டும் பெற்றிருந்தால் பெருமை வந்து சேர்ந்துவிடும் அறிவிலார் என்றாலும் அரியதனம் பெற்றிருந்தால் அறிவுடையோர் எல்லாரும் அவரைப் புகழ்ந்திடுவார் இல்லாரை எல்லாரும் ஏளனமாய்ப் பேசிடுவார் செல்வமிக உள்ளவர்க்கு செய்திடுவார் சிறப்பெல்லாம் அறவழியில் வந்தபொருள் அறஞ்செய்யத் தூண்டிவிடும் அதனால் பெரும்புகழும் அளவிலா இன்பமுமாம் அறிமுகமே இல்லாத ஆள்ஒருவர் என்றாலும் விளக்கு எனும் பொருள்வந்தால் வெளிச்சமிட்டுக்காட்டிவிடும் செத்தவர் திரவியமும் செருவென்ற பெரும்பொருளும் மற்றும் மண் புதையல்களும் மன்னவர்க்காம் என்று சொல்லு கூழ் என்னும் பெரும்பொருளைக் கொண்டவரே இப்புவியில் அறப்பயிர் தான்விளைத்து அடைந்திடுவார் இன்பமதை குறிப்பு : கூழ் = எல்லாச் செல்வங்களையும் குறிக்கும் பொதுப் பெயர் . இப்புவியில் எவ்வாறெல்லாம் பொருளைச் சேர்க்க வேண்டும் என்ற யுத்தி குறிப்பாக அரசனுக்கும் , பொதுவாக மற்றவர்க்கும் சொல்லப்பட்டுள்ளது .
- வேற்கவிராயர்