அதிகாரம் 75
அரண்
கோட்டையும் கொத்தளமும் கோலோச்சும் மன்னுக்கு அரணாகும் எந்நாளும் அஞ்சிடுவான் பகையரசன் மணிநீர் அகழியுடன் வலுவான கோட்டையதும் அணிநிழல் காடுமலை அரணாகும் என்று சொல்லு அகலம் உயரமதாய் அசையாத உறுதியுடன் அருமையாய் அமைந்தது அரணாகும் என்று சொல்லு வாயில்மிகச் சிறிதாயும் உள்ளரங்கம் பெரிதாயும் வெளித்தோற்றம் பயங்கரமாய் விளங்குவது அரணாகும் எதிரிகளின் கண்களுக்கு எந்தவழி புகுவதற்கு என்பதொன்றும் தெரியாமல் இருப்பதுவே அரணாகும் வல்லரணும் , வாள்படையும் வகைதொகையாய் இருந்தாலும் வல்லமையும் போர்த்திறனும் மல்லருக்கு வெற்றிதரும்
- வேற்கவிராயர்