அதிகாரம் 78
படைச்செருக்கு
என்னோடு போர்செய்து எமனுலகம் சென்றவர்கள் எண்ணில் அடங்காதார் எச்சரிக்கை எதிரிகளே நரிபிடிக்க மாட்டானே நால்வாய் வேழமதை கைவேல் தனைஒச்சி கதறடிக்கும் வீரனவன் போராண்மை கொண்டொருவன் போர்க்களத்தில் நிர்க்குங்கால் வெறுங்கையன் எதிரி என்றால் விட்டுவிடல் ஊராண்மை கனன்றுவந்த களிற்றின்மேல் கைவேலைப் பாய்ச்சியவன் தன் மார்பில் தைத்திருந்த வேல்பிடுங்கிக் கொக்கிரிப்பான் வேல்பாய்ந்து வரும்போது விழித்தகண் மூடாமல் வீரமுடன் கைப்பிடிப்பான் வேல்வீரன் என்று சொல்லு உயிருக்குத் தான்அஞ்சான் ஒல்காப் புகழ் ஒன்றே வீரக்கழல் அணிந்தான் விரும்புவான் என்று சொல்லு போருக்கு அஞ்சாத போர்மறவர் ஒருநாளும் பின்வாங்க மாட்டார்கள் பின்னடைவு கண்டாலும் குறிப்பு : நால்வாய் தொங்கும் வாய் - கை , களிறு - ஆண் யாணை , போர் ஆண்மை - வீரம் , ஊராண்மை - இரக்கம் , ஒல்காப்புகழ் - நிலைத்த புகழ் , கனன்று - கோபங்கொண்டு
- வேற்கவிராயர்