புலவி — அதிகாரம் 131
Coyness கலவி
குறள்கள்
- குறள் 1301 — புல்லா திராஅப் புலத்தை யவரறு மல்லனோய் காண்கஞ் சிறிது
- குறள் 1302 — உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றால் நீள விடல்
- குறள் 1303 — அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்
- குறள் 1304 — ஊடி யவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
- குறள் 1305 — நலத்தகை நல்லவர்க் கோரம் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து
- குறள் 1306 — துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயும் மற்று
- குறள் 1307 — ஊடலி ணுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது தன்றுகொ லொன்று.
- குறள் 1308 — நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் காதல ரில்லா வழி
- குறள் 1309 — நீரு நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது
- குறள் 1310 — ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்பது தவா