குறிப்பு அறிவுறுத்தல் — அதிகாரம் 128
Sign Language காதல் குறிப்பு அறிவுறுத்தல்
குறள்கள்
- குறள் 1271 — கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு
- குறள் 1272 — கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது
- குறள் 1273 — மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு
- குறள் 1274 — முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு
- குறள் 1275 — செறிதொடி செய்திறந்த கள்ளம் முறுதுயர் தீர்க்கு மருந்தொன்று றுடைத்து
- குறள் 1276 — பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து
- குறள் 1277 — தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை
- குறள் 1278 — நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து
- குறள் 1279 — தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி அஃதாண் டவள்செய் தது
- குறள் 1280 — பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு