கனவு நிலை உரைத்தல் — அதிகாரம் 122
Love Dreams கனவுநிலை உரைத்தல்
குறள்கள்
- குறள் 1211 — காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து
- குறள் 1212 — கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன்
- குறள் 1213 — நனவினான் நல்காதவரைக் கனவினான் காண்டலின் உண்டு, என் உயிர்
- குறள் 1214 — கனவினா லுண்டாகுங் காம நனவினால் நல்காரை நாடித் தரற்கு
- குறள் 1215 — நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது
- குறள் 1216 — நனவென வொன்றில்லை யாயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்
- குறள் 1217 — நனவினா னல்காக் கொடியார் கனவினா னென்னெம்மைப் பீழிப் பது
- குறள் 1218 — துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து
- குறள் 1219 — நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர்
- குறள் 1220 — நனவினால் நம்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர்