புணர்ச்சி மகிழ்தல் — அதிகாரம் 111
The Joys of Embracing காதல் + கூடல் = இன்பம்
குறள்கள்
- குறள் 1101 — கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள
- குறள் 1102 — பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து
- குறள் 1103 — தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு
- குறள் 1104 — நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள்
- குறள் 1105 — வேட்ட பொழுதி னவையவை போலுமே தோள்தாழ் கதுப்பினா டோள்
- குறள் 1106 — உறுதோறு றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்
- குறள் 1107 — தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு
- குறள் 1108 — வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு
- குறள் 1109 — ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன்
- குறள் 1110 — அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறுஞ் சேயிழை மாட்டு