நலம் புனைந்து உரைத்தல் — அதிகாரம் 112
In Praise of his Lady தலைவன் வர்ணனை!
குறள்கள்
- குறள் 1111 — நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்
- குறள் 1112 — மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று
- குறள் 1113 — முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
- குறள் 1114 — காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று
- குறள் 1115 — அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு நல்ல படாஅ பறை
- குறள் 1116 — மதியும் மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்
- குறள் 1117 — அறுவாய் நிறைந்த வதிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து
- குறள் 1118 — மாதர் முகம்போ லொளிவிட வல்லையேல் காதலை வாழி மதி
- குறள் 1119 — மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றல் மதி
- குறள் 1120 — அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்