குறிப்பு அறிதல் — அதிகாரம் 110
Hints காதல் வெளிப்பாடு
குறள்கள்
- குறள் 1091 — இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
- குறள் 1092 — கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற் செம்பாக மன்று பெரிது
- குறள் 1093 — நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர்
- குறள் 1094 — யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும்
- குறள் 1095 — குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்
- குறள் 1096 — உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை யுணரப் படும்
- குறள் 1097 — செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு
- குறள் 1098 — அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும்
- குறள் 1099 — ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள
- குறள் 1100 — கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில