துறவு — அதிகாரம் 35
Renunciation பொருள்களின் மீதுள்ள பற்றினை விடுதல்
குறள்கள்
- குறள் 341 — யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன்
- குறள் 342 — வேண்டி னுணடாகத் துறக்க துறந்தபி னீண்டியற் பால பல
- குறள் 343 — அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு
- குறள் 344 — இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து
- குறள் 345 — மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை
- குறள் 346 — யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்
- குறள் 347 — பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
- குறள் 348 — தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்
- குறள் 349 — பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
- குறள் 350 — பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு