திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கொல்லாமை — அதிகாரம் 33

அறத்துப்பால் · துறவற இயல்

Non-killing கொல்லாமை

குறள்கள்

  1. குறள் 321 — அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்
  2. குறள் 322 — பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை
  3. குறள் 323 — ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
  4. குறள் 324 — நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி
  5. குறள் 325 — நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை
  6. குறள் 326 — கொல்லாமை மேல்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று
  7. குறள் 327 — தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாம்பிறி தின்னுயிர் நீக்கும் வினை
  8. குறள் 328 — நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை
  9. குறள் 329 — கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து
  10. குறள் 330 — உயிருடம்பின் னீக்கியா ரென்ப செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural