திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அவா அறுத்தல் — அதிகாரம் 37

அறத்துப்பால் · துறவற இயல்

Yearning ஆசையினை ஒழித்தல்

குறள்கள்

  1. குறள் 361 — அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து
  2. குறள் 362 — வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்
  3. குறள் 363 — வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில்
  4. குறள் 364 — தூஉய்மை யென்பது தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
  5. குறள் 365 — அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ரற்றாக வற்ற இலர்
  6. குறள் 366 — அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா
  7. குறள் 367 — அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்
  8. குறள் 368 — அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற் றவாஅது மேன்மேல் வரும்
  9. குறள் 369 — இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின்
  10. குறள் 370 — ஆரா இயற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural