விருந்து ஓம்பல் — அதிகாரம் 9
Hospitality விருந்தினரை உபசரிக்கும் முறைமை
குறள்கள்
- குறள் 81 — இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
- குறள் 82 — விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
- குறள் 83 — வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று
- குறள் 84 — அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில்
- குறள் 85 — வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்
- குறள் 86 — செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு
- குறள் 87 — இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன்
- குறள் 88 — பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்
- குறள் 89 — உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு
- குறள் 90 — மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து