திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

செய்ந்நன்றி அறிதல் — அதிகாரம் 11

அறத்துப்பால் · இல்லற இயல்

Gratitude பிறர் செய்த நன்மையை என்றும் மறவானை

குறள்கள்

  1. குறள் 101 — செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது
  2. குறள் 102 — காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது
  3. குறள் 103 — பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது
  4. குறள் 104 — தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார்
  5. குறள் 105 — உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து
  6. குறள் 106 — மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு
  7. குறள் 107 — எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு
  8. குறள் 108 — நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று
  9. குறள் 109 — கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த வொன்றுநன் றுள்ளக் கெடும்
  10. குறள் 110 — எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural